/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குமிழங்குளத்தில் விளை நிலங்களில் தாழ்வாகச் செல்லும் மின் ஒயர்
/
குமிழங்குளத்தில் விளை நிலங்களில் தாழ்வாகச் செல்லும் மின் ஒயர்
குமிழங்குளத்தில் விளை நிலங்களில் தாழ்வாகச் செல்லும் மின் ஒயர்
குமிழங்குளத்தில் விளை நிலங்களில் தாழ்வாகச் செல்லும் மின் ஒயர்
ADDED : ஜன 15, 2024 11:00 PM

சிவகாசி : சிவகாசி அருகே எரிச்சநத்தம், குமிழங்குளம் பகுதியில் விவசாய நிலங்களில் கைக்கு எட்டும் வகையில் தாழ்வாக சொல்லும் மின் வயர்களால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி அருகே எரிச்சநத்தம் குமிழங்குளம் பகுதியில் விவசாய நிலங்களில் நெல் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது.
இந்நிலையில் இந்த விவசாய நிலங்களில் வழியாக மின் வயர்கள் செல்கின்றது. இந்த வயர்கள் அனைத்துமே மிகவும் தாழ்வாக செல்கின்றது. விவசாயப் பணிகள் மேற்கொள்ளும்போது சற்று கவனம் குறைவாக இருந்தாலும் கைக்கு எட்டும் உயரத்தில் உள்ளது.
ஒரு சில இடங்களில் பயிர்களை தொட்டுச் செல்லும் அளவிற்கு ஒயர்கள் தாழ்வாக செல்கின்றது. தற்போது விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் விவசாயிகள் அச்சத்துடனே வேலை செய்கின்றனர்.
எனவே இப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் வயர்களை உயர்த்தி கட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.