/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தின் உள்ளாட்சிகளில் மின்கட்டண நிலுவை ரூ.51.62 கோடி: குடிநீர் வடிகால் வாரியத்தில் மட்டும் ரூ.47.44 கோடி
/
மாவட்டத்தின் உள்ளாட்சிகளில் மின்கட்டண நிலுவை ரூ.51.62 கோடி: குடிநீர் வடிகால் வாரியத்தில் மட்டும் ரூ.47.44 கோடி
மாவட்டத்தின் உள்ளாட்சிகளில் மின்கட்டண நிலுவை ரூ.51.62 கோடி: குடிநீர் வடிகால் வாரியத்தில் மட்டும் ரூ.47.44 கோடி
மாவட்டத்தின் உள்ளாட்சிகளில் மின்கட்டண நிலுவை ரூ.51.62 கோடி: குடிநீர் வடிகால் வாரியத்தில் மட்டும் ரூ.47.44 கோடி
ADDED : நவ 28, 2024 04:47 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட உள்ளாட்சிகளில் மின் கட்டண நிலுவையாக ரூ.51.62 கோடி உள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தில் மட்டும் ரூ.47.44 கோடி நிலுவை உள்ளது. இந்தாண்டுடன் ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிய உள்ளதால் மின்வாரியம் நிலுவை தொகையால் தள்ளாடும் வாய்ப்புள்ளது.
மாவட்டத்தில் 450 ஊராட்சிகளில் ரூ.33.31 கோடி, 9 பேரூராட்சிகளில் ரூ.1.07 கோடி, நகராட்சிகளில் ரூ. 12.40 கோடி, மாநகராட்சியில் ரூ.4.82 கோடி என மொத்தம் உள்ளாட்சிகளில் மட்டும்ரூ. 51.62 கோடிக்கான மின்கட்டண தொகை நிலுவையில் உள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தில் மட்டும் ரூ.47.44 கோடி நிலுவையில் உள்ளது. இதில் தாமத கட்டணமும் அடங்கும்.
450 ஊராட்சிகளின் பதவிக்காலம் இந்தாண்டு டிசம்பர் உடன் முடிகிறது. குடிநீர் தொட்டி, தெருவிளக்கு, தாழ்வழுத்த மின் வயர்கள் போன்றவற்றிற்காக ஊராட்சிகளில் மின்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மின் கட்டண பாக்கியால் ஊராட்சிகளுக்கு மேலும் நிதிச்சுமை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. தாமதம் ஆக ஆக கூடுதல் கட்டணமும் நியமிக்கப்படும். பதவி இழந்த பின் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டாலும் வளர்ச்சி பணிகளில் தொய்வு இருப்பது போன்றே மின்கட்டண பாக்கி செலுத்துவதிலும் நீடிக்கும். மேலும் வரி வசூல் உள்ளிட்ட பணிகள் மந்தமாவதால் நிதி செலுத்துவதில் சுணக்கம் தான் நீடிக்கும்.
அதே போல் மாவட்டத்தில் தாமிபரணி குடிநீர் நுாற்றுக்கும் மேற்பட்ட பம்பிங் ஸ்டேஷன்கள் மூலம் மோட்டார்கள் மூலம் வரவழைக்கப்படுகின்றன. இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரியத்தில் மட்டும் ரூ.44 கோடி வரை நிலுவை வைக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நிலுவை தொகையை செலுத்தாமல் குடிநீர் வடிகால் வாரியம் அலட்சியம் செய்வதாக மின் துறையினர் புலம்புகின்றனர். மாவட்டத்தில் அதிகப்படியான குடிநீர் தேவைக்கு மோட்டார்கள் இயக்கப்படுவதால் இங்கு அதிக மின்கட்டண பாக்கி உள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைந்து உள்ளாட்சிகளின் நிலுவை தொகையை பெற்று இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் போனால் பாதிப்பு தான் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைஉணர்ந்து டிசம்பருக்குள் உள்ளாட்சிகளின் மின்கட்டண நிலுவையை முடிக்க முன்வர வேண்டும்.