/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்வாரிய செயற்பொறியாளர் 'சஸ்பெண்ட்'
/
மின்வாரிய செயற்பொறியாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 23, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: அலுவலக அறையில் பணம் எண்ணும் வீடியோ வெளியானதால், சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் கோட்ட செயற்பொறியாளராக பணி செய்து வருபவர் பத்மா.
இவர் தன் அலுவலக அறையின் நாற்காலியில் அமர்ந்தபடி, கையில் வைத்திருக்கும், 500 ரூபாய் நோட்டுகளை எண்ணும் வீடியோ, இரு வாரங்களுக்கு முன் வெளியானது.
அவர் கையில் வைத்திருந்தது 'லஞ்ச பணமா?' என, சந்தேகம் எழுந்தது. வீடியோ விவகாரம் குறித்து, உயர் அதிகாரிகள் விசாரித்தனர்.
இந்நிலையில், மாநில மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், பத்மாவை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

