ADDED : செப் 15, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: ஸ்கில்டு ஊழியர்களை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை மறுபரிசீலனை செய்வது, நிரந்தர பணியிடங்களை தேர்வு செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், பென்சனர் ஐக்கிய சங்கம், ஐ.டி.ஐ., படித்த வேலை வேண்டுவோர் சங்கத்தினர் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாவட்டச் செயலாளர் கலசலிங்கம் தலைமை வகித்தார். பென்சனர் ஐக்கிய சங்க மாவட்டச் செயலாளர் சரவணன் பேசினார். பொருளாளர் அனந்தராமன் நன்றிக்கூறினார்.
