/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தென்னை மரங்களை சேதப்படுத்தும் யானை --விவசாயிகள் வேதனை
/
தென்னை மரங்களை சேதப்படுத்தும் யானை --விவசாயிகள் வேதனை
தென்னை மரங்களை சேதப்படுத்தும் யானை --விவசாயிகள் வேதனை
தென்னை மரங்களை சேதப்படுத்தும் யானை --விவசாயிகள் வேதனை
ADDED : அக் 30, 2025 03:38 AM
சேத்துார்: சேத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் தோப்பில் யானை புகுந்து 17 தென்னை மரங்களை சேதப்படுத்தியது.
சேத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் தென்னை, மா, பலா, கரும்பு விவசாயம் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடைபெற்று ஊடுபயிராக வாழை, கொய்யா, காய்கறிகள் சாகுபடி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு செல்லப்பிள்ளை ஊரணி அருகே விவசாய பகுதியில் இரண்டு வாரங்களாக முகாமிட்ட ஒற்றை யானை புகுந்து சேத்துாரை சேர்ந்த சுந்தர் தோப்பில் 17 மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் : இரண்டு தலைமுறைகளாக இப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். எப்போதும் யானைகள் பிரச்சனை இல்லை. கடந்த மாம்பழ சீசனில் இருந்து ஒற்றை காட்டு யானை தென்னை மா மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் இரவு புகுந்து ஆறு வருடங்கள் பாதுகாத்து வளர்த்த 17 தென்னை மரங்களை சேதப்படுத்தி விட்டது.தனியாக காட்டிற்குள் வர முடியவில்லை. யானையை வனப்பகுதிக்குள் விரட்டி தீர்வு காண வேண்டும்.

