/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் உடல் நலக்குறைவால் யானை இறப்பு வனத்துறை அதிகாரி தகவல்
/
ஸ்ரீவி.,யில் உடல் நலக்குறைவால் யானை இறப்பு வனத்துறை அதிகாரி தகவல்
ஸ்ரீவி.,யில் உடல் நலக்குறைவால் யானை இறப்பு வனத்துறை அதிகாரி தகவல்
ஸ்ரீவி.,யில் உடல் நலக்குறைவால் யானை இறப்பு வனத்துறை அதிகாரி தகவல்
ADDED : செப் 27, 2025 01:53 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியில் நேற்று முன்தினம்ஆண்யானை உடல் நலக்குறைவாக இறந்ததாக வனத்துறை துணை இயக்குனர் முருகன் தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்துார் விரியன் கோயில் வனப்பகுதியில் நேற்று முன்தினம் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. புலிகள் காப்பகத் துணை இயக்குனர் முருகன் உட்பட வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள், வனவிலங்கு தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அங்கு சென்றனர்.
டாக்டர்கள் யானையின் உடலை மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் அப்பகுதியில் உடல் அடக்கம் செய்யப் பட்டது.
துணை இயக்குனர் கூறுகையில் '' யானையின் பல் உடைந்து சரிவர உணவு சாப்பிட முடியாமல் நோய்வாய்ப்பட்டு இயற்கை மரணம் அடைந்திருக்கலாம் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்'' என்றார்.