தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தோப்பில் யானைகள் புகுந்து தென்னை மரங்கள் சேதம்

தோப்பில் யானைகள் புகுந்து தென்னை மரங்கள் சேதம்

தோப்பில் யானைகள் புகுந்து தென்னை மரங்கள் சேதம்


UPDATED : ஜூன் 11, 2026 09:14 PM

ADDED : ஜூன் 11, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2026 09:14 PM ADDED : ஜூன் 11, 2026 09:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜபாளையம்:ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார தென்னந்தோப்புகளில் யானை புகுந்து வளர்ந்த மரங்களை வோரோடு சாய்த்ததால் விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர்.

ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆறு தெற்கே கல்லாறு ஓடை சுற்றி நூற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, பலா, வாழை சாகுபடியில் விவசாயிகள் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் ராஜபாளையத்தை சேர்ந்த சங்கர், முருகேசன், கல்யாணி, ரமணா, ரகு உள்ளிட்டோரின் தோப்பில் யானைக்கூட்டம் இரவு நேரங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.

20 வருடம் வளர்ந்த தென்னை மரங்களை வேருடன் சாய்த்தும், இரண்டு வருட மரங்களின் குருத்துகளை பிய்த்து சேதப்படுத்தியுள்ளது.

இதனால் பாடுபட்டு வளர்த்த 30-க்கும் அதிகமான தென்னை மரங்கள் சேதம் அடைந்து விட்டதாக வேதனை தெரிவித்ததுடன், இரவு நேர காவலாளிகளை காவலுக்கு வைத்தாலும் பயனற்று வழி தெரியாமல் உள்ளனர்.

இது குறித்து விவசாயி ரகு: புரசம்பாறை கோயில் பகுதியில் முகாமிடும் யானை கூட்டம் கல்லாறு பாதை வழியே தோப்புகளின் வேலிகளை உடைத்து உள்ளே நுழைந்து சேதம் ஏற்படுத்தி திரும்புகின்றன. இதனால் கடந்த இரண்டு வருடங்களாக இப்பகுதியில் தென்னங்கன்றுகளை வளர்க்க முடியவில்லை. வனத்துறையினர் யானை கூட்டத்தை விவசாய நிலங்களுக்குள் நுழையாதவாறு வனப்பகுதியில் விரட்ட வழி காண வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us