தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுங்கள்


ADDED : மார் 10, 2024 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2024 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை : ருப்புக் கோட்டையில உள்ள நீர்நிலைகளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் அறிவுறுத்தினார்.

அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடந்தது. கமிஷனர் அசோக்குமார், துணை தலைவர் பழனிச்சாமி, அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள்


பாலசுப்பிரமணியன், (மார்க்சிஸ்ட்): உயர்நீதிமன்றம் 2000 திற்கு பின்பு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை பயன்படுத்தி நகரில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை உடன் அகற்ற வேண்டும்.

அப்துல்ரகுமான், (தி.மு.க): நகரில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற உள்ளது. இந்தப் பணிக்காக நகராட்சி சர்வேயர் ஆய்வு செய்து வருகிறார். சர்வே பிரிவில் பணிகள் பாதிப்பு அடையாமல் இருக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

ராமதிலகம், (அ.தி.மு.க): தம்மாந் தெரு, பெரிய தெருவிலும் மினி பவர் பம்ப் அமைக்க வேண்டும்.

சிவப்பிரகாசம், (தி.மு.க): நகரில் பாதாள சாக்கடை திட்டம் வர உள்ளது. புதியதாக தாமிரபரணி குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பாதாள சாக்கடை திட்டம் பணிகள் முடியும் வரை, சிரமமாக இருக்கும். பொதுமக்களுக்கு கவுன்சிலர்கள் பணிகள் குறித்து அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு விவாதங்கள் நடந்தது. -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us