ADDED : அக் 07, 2024 04:41 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 538 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில் 127 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றனர். இதில் 1226 ஆண்கள், 1190 பெண்கள் என மொத்தம் 2416 பேர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 2 மாற்றுத்திறனாளிகள் உட்பட 293 ஆண்கள், 245 பெண்கள் என மொத்தம் 538 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் இரண்டாம் கட்ட தேர்விற்கு 277 பேர் தேர்வாகியுள்ளனர்.
