தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆக்கிரமிப்பு, திறந்த வெளியில் கழிவுநீர்

 ஆக்கிரமிப்பு, திறந்த வெளியில் கழிவுநீர்

 ஆக்கிரமிப்பு, திறந்த வெளியில் கழிவுநீர்


ADDED : பிப் 22, 2026 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேத்துார்: சேத்துார் பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமின்றி துர்நாற்றம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடம் உட்பட பல்வேறு வசதிகளின்றி சேத்துார் பேரூராட்சி மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சேத்துார் பேரூராட்சியில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். மதுரையில் இருந்து குற்றாலம் செல்வதற்கான பிரதான ரோடு உள்ள பகுதியில் உள்ள பாரம்பரிய பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கான அடிப்படை வசதி நிறைவேற்றப் படவில்லை.

குடியிருப்புகளில் பெருகி வரும் நாய்கள் இரவு நேரங்களில் பணிபுரிந்து தனியாக செல்லும் ஆண்களையும் விட்டு வைப்பதில்லை. விரட்டி கடிப்பதால் துணை இன்றி மக்கள் வெளிவர தயங்குகின்றனர். பல மடங்கு மக்கள் தொகை பெருகியும் பயணிகளுக்கான நிழற்குடை கழிப்பறை சுகாதார வசதி சீரமைக்கப்படவில்லை.

சேத்துார் பஸ் ஸ்டாண்ட் வழியே முகவூர் செல்லும் இணைப்பு பாதை வளைவில் உள்ள சிக்கலை தீர்க்க வேண்டும். பயணிகளுக்கான கழிப்பறை, வாகன நிறுத்தம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்டவைகளை பேரூராட்சி குடியிருப்போர் எதிர்பார்த்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us