UPDATED : அக் 13, 2026 06:09 PM
ADDED : அக் 13, 2026 06:07 PM

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் வையன் வீதியில் நீர்நிலையை ஆக்கிரமித்து இருந்த குடியிருப்பு கட்டடங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டது.
சிவகாசி அருகே திருத்தங்கலில் வையன் வீதியில் பறையன் குளம் ஊருணி உள்ளது. இங்கு ஆக்கிரமிப்பு செய்து இரு குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தது. நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தனிநபர் சென்னை கிளை மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எனவே ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர் குளத்தை ஆக்கிரமித்து இருந்த இரு கட்டடங்கள் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. கட்டட உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் பாதுகாப்பு பணி ஈடுபட்டனர்.
