UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 07:48 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்துார், சுந்தரபாண்டியம் பகுதியில் பொங்கல் 2027 இலவச வேட்டி, சேலை உற்பத்தி தொடர்பாக சென்னை கைத்தறி இயக்குனரால் நியமிக்கப்பட்ட உதவி அமலாக்க அலுவலர் கவிதா தலைமையிலான குழுவினர் கூட்டுறவு சங்க நெசவாளர்கள் வீடுகளில் ஆய்வு செய்தனர்.
மேலும் ஸ்ரீவில்லிப்புத்துார் நுால் கோடவுனில் நுால் தர ஆய்வு, சங்க மேலாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் உதவி இயக்குனர் சேரன், அலுவலக கண்காணிப்பாளர் சுதாகர், விஸ்வேஸ்வரன், கைத்தறி இன்ஸ்பெக்டர்கள் காஜா, மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
