நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை வழியாக செல்லும் ஸ்ரீவில்லிபுத்துார் -- பார்த்திபனுார் ரோடு உட்பட ரோடு பணிகளை கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை சார்பாக ஸ்ரீவில்லிபுத்துார் - - பார்த்திபனுார் ரோடு அகலப்படுத்தி பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. அருப்புக்கோட்டை - வாலிநோக்கம் ரோடு, அருப்புக்கோட்டை - குருந்தமடம் ரோடு, மறவர் பெருங்குடி ரோடு பந்தல்குடி ரோடு ஆகியவற்றில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி ஆய்வு செய்தார்.
பாலங்களை துார்வாருதல், வர்ணம் பூசுதல், செடிகளை அகற்றுதல், சாலை ஓர பணிகளை சீர் செய்தல் உட்பட பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார். உடன் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் இருந்தனர்.

