விருதுநகர்: விருதுநகரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் விழா நடந்தது.
அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக விருதுநகர் கோட்டையூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 5 புதிய வகுப்பறைகள், 2 அறிவியல் ஆய்வுக்கூடங்கள், விருதுநகர் அரசு ஆதிதிராவிடர் நல கல்லுாரி மாணவியர் விடுதியில் கற்றல் கற்பித்தல்' அறை ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பின், அமைச்சர்கள் இருவரும் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள், கலைஞரின் கனவு இல்லம், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், பிரதம மந்திரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தின் 1,155 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரத்து 322 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

