/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஈரோடு - நாகர்கோவில் சிறப்பு ரயில்
/
ஈரோடு - நாகர்கோவில் சிறப்பு ரயில்
ADDED : டிச 25, 2025 05:28 AM
விருதுநகர்: புத்தாண்டை முன்னிட்டு ஈரோடு --- நாகர்கோவில் இடையே சேலம், சென்னை எழும்பூர், விருத்தாச்சலம், மதுரை வழியாக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
டிச. 30 மாலை 4:00 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06025), மறுநாள் மதியம் 1:15 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது. மறுமார்க்கத்தில் டிச. 31 இரவு 11:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06026), மறுநாள் இரவு 8:30 மணிக்கு ஈரோடு செல்கிறது.
சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர், சாத்துார், திருநெல்வேலி வழியாக செல்லும்.
இரண்டு 'ஏசி' சேர் கார் பெட்டிகள், 9 சேர் கார் பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

