தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மண் அள்ளும் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

மண் அள்ளும் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

மண் அள்ளும் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்


UPDATED : ஜூன் 01, 2026 06:32 PM

ADDED : ஜூன் 01, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2026 06:32 PM ADDED : ஜூன் 01, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்:ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் உதிரி பாகங்கள் விலை உயர்வை கண்டித்து சத்திரப்பட்டி அருகே ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் 50க்கும் அதிகமான மண் அள்ளும் வாகன உரிமையாளர்கள் உள்ளனர். கால்வாய் சீரமைப்பு, மரம் நடுதல் உள்ளிட்ட விவசாய பணிகள், கட்டுமான தொழிலில் வாடகை அடிப்படையிலும், நகராட்சி பேரூராட்சி துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த வருடங்களில் ஆண்டுக்கு ஒரு முறை சாலை வரி ரூ. 10 ஆயிரம் செலுத்தி வந்தவர்களிடம் தற்போது ஆயுள் சாலை வரி என்ற பெயரில் 15 வருடங்களுக்கு மொத்தமாக ரூ. 3 லட்சம் வசூல் செய்யப்படுகிறது. புதிய வாகனத்தின் விலையும் ரூ. 5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் கிரீஸ், ஆயில்,உதிரி பாகங்கள் விலை உயர்ந்துள்ளன.

எனவே மணிக்கு ரூ.1,100 என்று இருந்த வாடகையை நேற்று முதல் ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

உதிரி பாகங்களின் விலை உயர்வை திரும்ப பெறவும் பழைய முறையில் ஆண்டுக்கு ஒரு முறை சாலை வரி செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தவும் தென் மாவட்ட மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் தர்மர் தலைமையில் ஒரே இடத்தில் வாகனங்களை நிறுத்தி அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us