/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தனிஷ்க் ஜுவல்லரியில் எக்சேஞ்ச் திருவிழா
/
தனிஷ்க் ஜுவல்லரியில் எக்சேஞ்ச் திருவிழா
ADDED : ஜூன் 15, 2025 05:50 AM

சிவகாசி : சிவகாசி தனிஷ்க் ஜுவல்லரியில் தங்க பரிமாற்றம் எனும் எக்சேஞ்ச் திருவிழா நடந்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு புதிய நகைகளை உரிமையாளர் ராஜேஷ் வழங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில், டாட்டா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நிறுவனத்தில் தங்க பரிமாற்றத் திட்டத்தின் கீழ் பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகள் வாங்கும் போது பழைய தங்கத்தின் மதிப்பில் ஒரு காரட் (கிராம் ஒன்றுக்கு ரூ.200) கூடுதலாக பெறலாம். வைர நகைகளை வாங்கும் போது பழைய தங்கத்தின் மதிப்பு 2 காரட் (கிராம் ஒன்றுக்கு ரூ.400 ) கூடுதலாக பெறலாம். தனிஷ்க் நிறுவனம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள எந்த நகைக்கடைகளில் வாங்கிய நகைகளையும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
நகைகளை மதிப்பிடுவதற்கு காரட் மீட்டர் வசதி உள்ளது. இதில் வெளிப்படையாக தங்கத்தின் தரத்தை மதிப்பீடு செய்து வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான நகைகளை தேர்வு செய்து வாங்கலாம். புதிய டிசைன்களுடன், பல நகை தொகுப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த சலுகை ஜூன் 30 ம் தேதி வரை வழங்கப்படும், என்றார். நிறுவன மேலாளர் ராஜேஸ்வரன், ஊழியர்கள் உடன் இருந்தனர்.