தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பொருட்காட்சி திறப்பு விழா

 பொருட்காட்சி திறப்பு விழா

 பொருட்காட்சி திறப்பு விழா


ADDED : மார் 31, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 04:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே., கல்வி குழுமங்களின் கல்வி வளர்ச்சிக்காக முத்துமாரியம்மன் பங்குனிபொங்கலை முன்னிட்டு பொருட்காட்சி திறப்பு விழா நடந்தது. நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். ஆண்கள் மேல்நிலை பள்ளி செயலர் காசி முருகன் வரவேற்றார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பொருட்காட்சி திறந்து வைத்தார்.

அருப்புக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றிய சேர்மன் சுப்புராஜ் முதல் டிக்கெட் விற்பனையை துவக்கி வைத்தார். உறவின்முறை செயலர் சரவணன், துணைத்தலைவர் சுரேஷ் குமார், கோவில் டிரஸ்டி கணேசன், பெண்கள் பள்ளி செயலர் ராம்குமார், ஆண்கள் பள்ளி தலைவர் ஜெய்கணேஷ் , பிற பள்ளிகள் கல்லூரி செயலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொருட்காட்சி செயலர் பிரசாத் நன்றி கூறினார்.

----

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us