/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ் டிப்போவை நிரந்தரமாக்க எதிர்பார்ப்பு
/
பஸ் டிப்போவை நிரந்தரமாக்க எதிர்பார்ப்பு
ADDED : அக் 01, 2024 04:33 AM
காரியாபட்டி: நீண்ட நாள் கோரிக்கையான கிடப்பில் போடப்பட்டுள்ள காரியாபட்டி பஸ் டிப்போவை நிரந்தரமாக்கப்படுமா என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
காரியாபட்டி சுற்று கிராமங்களுக்கு அருப்புக்கோட்டை டிப்போவில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்ட நேரத்தில் பணியாளர்கள் காரியாபட்டிக்கும், டிப்போவிற்கும் அலைந்து பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்களை இயக்க முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர். இதனை போக்க, இப்பகுதியில் டிப்போ அமைத்து அனைத்து பகுதிகளுக்கும் சீராக உரிய நேரத்திற்கு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து 13 ஆண்டுகளுக்கு முன் வாடகை இடத்தில் தற்காலிகமாக டிப்போ அமைக்கப்பட்டது. அதற்குப்பின் அ.தி.மு.க., ஆட்சியில் 110 விதியின் கீழ் பல்வேறு இடங்களில் நிரந்தர டிப்போ அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, மற்ற இடங்களில் டிப்போ அமைத்து நிரந்தரமாகப்பட்டது.
காரியாபட்டியில் மட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் வாடகை இடத்தில் இயங்கி வருகிறது. அடிப்படை வசதிகள் இன்றி பணியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மழை நேரங்களில் சேறும் சகதியுமாகி பஸ்கள் சென்று வருவதில் பெரிதும் சிரமம் உள்ளது.
இங்கு நிரந்தர பஸ் டிப்போ அமைக்க பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாதது வேதனை அடைய செய்தது. நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பதுடன், கிடப்பில் போடப்பட்டுள்ள இத்திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.