/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே டூவீலர் ஸ்டாண்ட் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
/
காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே டூவீலர் ஸ்டாண்ட் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே டூவீலர் ஸ்டாண்ட் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே டூவீலர் ஸ்டாண்ட் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜன 09, 2025 04:43 AM
காரியாபட்டி: காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே பேரூராட்சி நிர்வாகம் டூவீலர் ஸ்டாண்ட் ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட ஊர்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
நீண்ட தூரம் டூவீலரில்சென்று வருவதில் சிரமம்இருப்பதால், காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட், ஒன்றிய அலுவலக ரோடு, முக்குரோடு, ரோட்டோரம் என பல்வேறு இடங்களில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
வேலை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பும் வரை கேட்பாரின்றி கிடக்கிறது. குறிப்பாக பஸ் ஸ்டாண்ட் அருகே ஒன்றிய அலுவலக ரோட்டில் நூற்றுக்கணக்கான டூவீலர்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
கடைக்கு வருபவர்கள், அப்பகுதியில் செல்பவர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் ஒன்றிய அலுவலக ரோட்டில் சென்று வருவதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் பல டூவீலர்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது.
இதற்கு காரியாபட்டியில் டூவீலர் ஸ்டாண்ட் இல்லாததே காரணம். பேரூராட்சி சார்பாக டூவீலர் ஸ்டாண்ட் ஏற்படுத்தி வருவாயை பெருக்கவும், வெளியூர் வேலைகளுக்கு செல்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கவும் டூவீலர் ஸ்டாண்ட் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.