/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிரந்தர துப்புரவு பணியாளர்களை நியமிக்க எதிர்பார்ப்பு! ஊராட்சிகளில் துாய்மை பணிகள் சுணக்கம்
/
நிரந்தர துப்புரவு பணியாளர்களை நியமிக்க எதிர்பார்ப்பு! ஊராட்சிகளில் துாய்மை பணிகள் சுணக்கம்
நிரந்தர துப்புரவு பணியாளர்களை நியமிக்க எதிர்பார்ப்பு! ஊராட்சிகளில் துாய்மை பணிகள் சுணக்கம்
நிரந்தர துப்புரவு பணியாளர்களை நியமிக்க எதிர்பார்ப்பு! ஊராட்சிகளில் துாய்மை பணிகள் சுணக்கம்
ADDED : ஏப் 30, 2024 12:14 AM
ஊராட்சிகளில் காலம் காலமாக நிரந்தர பணியாளர்களே வாறுகால் தள்ளுதல், ரோடு தெருவில் உள்ள குப்பைகளை அள்ளுதல் ,தொற்றுநோய் பரவாமல் தடுக்க பிளிசிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர்.
ஊராட்சியின் பரப்பளவை பொறுத்து 8 முதல் 42 வரையிலான நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணி புரிந்தனர். காலப்போக்கில் வயது முதிர்வு காரணமாக பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். இதனால் தற்போது ஊராட்சிகளில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் இல்லாத நிலை உள்ளது.
ஊராட்சித் தலைவர்கள் தற்காலிக பணியாளர்களை நியமித்து துாய்மை பணிகளை செய்து வருகின்றனர். தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் மிகவும் குறைவு. வேலை நேரம் அதிகம் என்பதால் பலரும் துாய்மை பணியை மேற்கொள்ள முன் வருவது இல்லை. இதனால் ஊராட்சிகளில் துாய்மை பணிகள் பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக காலியாக உள்ள இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் தேக்கமடைகின்றன. இதில் சுத்தமான மழைநீர் தேங்கும் போது ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகி மனிதர்களை கடிக்கும் நிலை உள்ளது.
ஏடிஸ் கொசுக்கள் கடித்தால் மனிதர்களுக்கு டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. டெங்கு காய்ச்சல் உருவாக காரணமான ஏடிஸ் கொசுக்கள் பிளாஸ்டிக் கழிவுகளில் தேங்கும் சுத்தமான தண்ணீரே காரணம் ஆகிறது.
ஊராட்சி பகுதிகளில் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்கப்படும். இதனால் அவர்களது பொருளாதார ஏற்றம் பெறும். மேலும் துப்புரவு பணிகளையும் அவர்கள் விரைந்து முனைப்புடன் முடிப்பார்கள்.
பிளாஸ்டிக் கேரிப்பை, தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்டவை தற்போது ஊராட்சி பகுதிகளில் அதிக அளவில் சேகரம் ஆகிறது மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரிக்கும் பணி நடைபெறவில்லை. இந்த குப்பை கழிவுகள் ரோட்டின் ஓரத்திலும் காலியாக உள்ள வீட்டுமனைகளிலும் குவிந்து காணப்படுகின்றன.
ஊராட்சித் தலைவர்களால் தற்காலிக பணியாளர்களை கொண்டு ஊராட்சி முழுவதும் துாய்மை பணியினை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
ஒரு ஊராட்சியின் பரப்பளவை கணக்கிட்டு ஊராட்சிகளுக்கு தேவையான நிரந்தர துப்புரவு பணியாளர்களை நியமிப்பதன் மூலமே ஊராட்சியில் நிலவும் சுகாதார பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். எனவே ஊராட்சிகளுக்கு தேவையான நிரந்தர துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்திட மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும்.

