/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவன் கோயில் தெப்பத்தை பராமரிக்க எதிர்பார்ப்பு
/
சிவன் கோயில் தெப்பத்தை பராமரிக்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 02, 2024 05:43 AM

சாத்துார்: சாத்துார் சிவன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சிதம்பரேஸ்வரர் கோயில் 600 ஆண்டுகள் பழமையானது. சாத்துார் மக்கள் சிவன் கோயில் என அழைத்து வருகின்றனர். கோயில் முன்பு பழமையான தெப்பக்குளம் உள்ளது.
பழமையான இந்த தெப்பக்குளத்தை சுற்றிலும் அரசமரம் வேரூன்றி வளர்ந்து வந்தது. இதனால் தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் பாதிக்கப்பட்டு தற்போது இடிந்து கீழே விழுந்து உள்ளது.
முக்குராந்தல் பகுதியில் இருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் கடந்த காலங்களில் குழாய் அமைக்கப்பட்டது.இதன் மூலம் மழை பெய்தால் தானாகவே தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் நிலை உள்ளது இந்த நிலையில் தொடர்ந்து பராமரிக்கப்படாததால் தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் இருந்த மடப்பள்ளி இடிக்கப்பட்டுள்ள நிலையில்இந்த கட்டடக் கழிவுகளும் மரங்களும் தெப்பக்குளத்திற்குள் விழுந்து குப்பை மேடாக காட்சி தருகிறது.
மேலும் தெப்பக்குளத்தை குப்பை கொட்டும் இடமாகவும் திறந்தவெளி கழிப்பிடமாகவும் மார்க்கெட்டுக்கு வரும் மக்கள் பயன்படுத்தி வருவதால் பக்தர்கள் மனவேதனை அடைகின்றனர்.
தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர்களில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டி அகற்றுவதோடு பலவீனமான காம்பவுண்டு சுவரை புதியதாக கட்டவும் தெப்பக்குளத்தில் உள்ள கழிவு நீரை அகற்றி சுத்தமானதண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெப்பக்குளத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சுகாதாரமாகவும் துாய்மையாகவும் பராமரிக்க ஹிந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

