/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் போக்குவரத்து பணிமனைக்கு புதிய பஸ்கள் வழங்க எதிர்பார்ப்பு
/
சாத்துார் போக்குவரத்து பணிமனைக்கு புதிய பஸ்கள் வழங்க எதிர்பார்ப்பு
சாத்துார் போக்குவரத்து பணிமனைக்கு புதிய பஸ்கள் வழங்க எதிர்பார்ப்பு
சாத்துார் போக்குவரத்து பணிமனைக்கு புதிய பஸ்கள் வழங்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 04, 2024 11:43 PM
சாத்துார் : சாத்துார் அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ் போக்குவரத்து பணிமனைக்கு புதிய பஸ்கள் வழங்கவேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
சாத்துார் அரசு போக்குவரத்து கழகம் டவுன் பஸ் பணிமனையில் இருந்து தினமும் 48 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அடிக்கடி பழுதாகி விடுகின்றன.
காரணம் ஏற்கனவே ரூட் பஸ்க்காக ஓட்டப்பட்ட இவை தற்போது டவுன் பஸ்களாக மாற்றப்பட்டு கிராமங்களுக்கு இயக்கப்படுகிறது.
சாத்துார் பணிமனையை சேர்ந்த டவுன் பஸ்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகி நிற்பதோடு பேட்டரிகள் சார்ஜ் இல்லாமல் போவதால் செல்ப் ஸ்டார்ட் ஆகாமல் ஆங்காங்கே நின்று விடுகிறது.
இதில் பயணம் செய்யும் பயணிகள் பஸ்சை தள்ளி விட்டு தான் ஸ்டார்ட் செய்யும் நிலை உள்ளது. சாத்துார் பஸ் ஸ்டாண்டில் அடிக்கடி பஸ்கள் ஸ்டார்ட் ஆகாமல் நின்று விடும் போது பயணிகள் பஸ்சை தள்ளியே ஸ்டார்ட் செய்கின்றனர். இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி தவிக்கின்றனர். இதனாலயே பலரும் தனியார் பஸ்களை நாடி செல்கின்றனர்.
பழைய பஸ்களை திரும்ப பெற்று சாத்துார் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு புதிய பஸ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

