/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டை பருத்தி சேலைகளுக்கு எதிர்பார்ப்பு! புவிசார் குறியீடு வழங்க நெசவாளர்கள்
/
அருப்புக்கோட்டை பருத்தி சேலைகளுக்கு எதிர்பார்ப்பு! புவிசார் குறியீடு வழங்க நெசவாளர்கள்
அருப்புக்கோட்டை பருத்தி சேலைகளுக்கு எதிர்பார்ப்பு! புவிசார் குறியீடு வழங்க நெசவாளர்கள்
அருப்புக்கோட்டை பருத்தி சேலைகளுக்கு எதிர்பார்ப்பு! புவிசார் குறியீடு வழங்க நெசவாளர்கள்
ADDED : அக் 02, 2025 11:29 PM

அருப்புக்கோட்டையில் 19 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 3 ஆயிரம் நெசவாளர்கள் உறுப்பினர்களாகவும், 1000 கைத்தறிகள் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றன.
இவற்றில் கண்களைகவரும் வண்ணங்களில் அனைத்து வயதினரும் விரும்பி உடுத்தும் பருத்தி சேலைகள், செயற்கை பட்டு சேலைகள், செட்டிநாடு பருத்தி சேலைகள், ஆண்களுக்கு லுங்கிகள், வேட்டிகள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு தீபாவளி, பொங்கல் பண்டிகைக்காக செப். 15 முதல் ஜன. 31 வரை என மொத்தம் 139 நாட்களுக்கு அனைத்து கைத்தறி ஜவுளி ரகங்களும் 30 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.
இதையடுத்து அருப்புக்கோட்டை நெசவாளர் சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக மாநிலம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விற்பனையில் அருப்புக்கோட்டை பருத்தி சேலைகளுக்கு நல்லவரவேற்பு உள்ளது.
காஞ்சிபுரம் பட்டு சேலைகள், மதுரை சுங்குடி சேலைகள், திருநெல்வேலி செடிபுட்டா சேலைகள் உள்பட 10 கைத்தறி ஜவுளி ரகங்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. மேலும் அருப்புக்கோட்டை பருத்தி சேலைகளுக்கும் புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளிசந்தைகளில் விற்பனை அதிகமாகி நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு உதவியாக இருக்கும். நெசவாளர்களின் நீண்ட கால கோரிக்கையான அருப்புக்கோட்டை பருத்தி சேலைகளுக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.