/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி ரயில்வே கிராசிங்கில் பாலம் கட்ட எதிர்பார்ப்பு
/
நரிக்குடி ரயில்வே கிராசிங்கில் பாலம் கட்ட எதிர்பார்ப்பு
நரிக்குடி ரயில்வே கிராசிங்கில் பாலம் கட்ட எதிர்பார்ப்பு
நரிக்குடி ரயில்வே கிராசிங்கில் பாலம் கட்ட எதிர்பார்ப்பு
ADDED : செப் 16, 2025 03:52 AM
நரிக்குடி: நரிக்குடியில் ரயில்வே கிராசிங்கில் அடிக்கடி கேட் மூடப்படுவதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பாலம் கட்ட எதிர்பார்ப்பு எழுந் துள்ளது.
நரிக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை, சென்னை வரை ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலும் பகல் நேரங்களில் நரிக்குடியை கடந்து செல்கிறது. அடிக்கடி ரயில்வே கிராசிங்கில் கேட் மூடப்படுகிறது. திருப்புவனம், காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்துவரும் வாகன ஓட்டிகள் ரயில் கடந்து செல்லும் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
ஆத்திர அவசரத்திற்கு எங்கும் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. அருகில் மாற்று வழி இல்லாததால் கடந்து செல்ல முடியாமல் பயணிகள், தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.
பஸ்களை உரிய நேரத்திற்கு இயக்க முடியாமல் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு நரிக்குடி ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.