/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் நான்கு வழிச்சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைக்க எதிர்பார்ப்பு
/
சாத்துாரில் நான்கு வழிச்சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைக்க எதிர்பார்ப்பு
சாத்துாரில் நான்கு வழிச்சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைக்க எதிர்பார்ப்பு
சாத்துாரில் நான்கு வழிச்சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 27, 2025 06:50 AM
சாத்துார் : சாத்துார் ஆண்டாள்புரம் நகர் மக்கள் நான்கு வழிச்சாலையை கடக்க சுரங்கப்பாதையை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டாள்புரம், மேல காந்தி நகர் நடராஜா தியேட்டர் ரோடு ஆகிய பகுதியில் வசிக்கும் மக்கள் நான்கு வழிச்சாலையை படந்தால் ஜங்ஷன் ரோட்டிற்கு வந்து கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சாத்துார் நான்கு வழிச்சாலை போடப்படுவதற்கு முன்பு பைபாஸ் ரோடாக இருந்தது. அப்போது பழைய படந்தால் ரோடு ,தியேட்டர் ரோடு பகுதி மக்கள் பைபாஸ் ரூட்டை நடந்து கடந்து வந்தனர்.
நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்ட பின்னர் இந்த பாதை இரும்பு கம்பிகளால் அடைக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. தற்போது படந்தால் ஜங்ஷனில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
நான்கு வழிச்சாலையை கடந்து செல்வதற்கு ஆண்டாள்புரம், மேல காந்தி நகர் நடராஜா தியேட்டர் ரோடு நகர் மக்கள் செல்லும் போது 500 மீட்டர் தொலைவில் கடக்க வேண்டிய பாதையை முக்கால் கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் மக்கள் நீண்ட காலமாக ஆண்டாள்புரம் தியேட்டர் ரோடு பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். தற்போது புதியதாக கட்டப்பட உள்ள மேம்பாலத்தின் திட்டத்தில் இந்தப் பகுதியையும் சேர்த்து சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

