/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அத்திகுளம் ரோடு வரை ரயில்வே பிளாட்பாரம் நீட்டிக்க எதிர்பார்ப்பு
/
அத்திகுளம் ரோடு வரை ரயில்வே பிளாட்பாரம் நீட்டிக்க எதிர்பார்ப்பு
அத்திகுளம் ரோடு வரை ரயில்வே பிளாட்பாரம் நீட்டிக்க எதிர்பார்ப்பு
அத்திகுளம் ரோடு வரை ரயில்வே பிளாட்பாரம் நீட்டிக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 04, 2025 04:50 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களை அத்திகுளம் ரோடு வரை நீட்டிக்க வேண்டுமென சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நகரின் தென் கிழக்கு பகுதி கிராமங்களான அத்திகுளம், நாச்சியார்பட்டி, அச்சம் தவிழ்த்தான், ஏ.ராமலிங்காபுரம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர், கல்லூரி மாணவர்கள் விருதுநகர், மதுரை, தென்காசி, போன்ற நகரங்களுக்கு ரயில்கள் மூலம் பயணித்து வருகின்றனர்.
இதற்காக இவர்கள் கிருஷ்ணன் கோவில் தெரு, தாலுகா ஆபிஸ், மின்வாரிய அலுவலகம் வழியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு டூவீலர்களில் வருகின்றனர். இதில் டவுன் பஸ்சில் வருபவர்கள் அத்திகுளம் ரயில்வே கேட்டில் இறங்கி தண்டவாளத்தின் வழியாக முதலாம் பிளாட்பாரம் வழியாக ஸ்டேஷனுக்குள் வருகின்றனர்.
இரவு 6:50 மணிக்கு செங்கோட்டை செல்லும் ரயிலில் வரும் பயணிகள் இருண்ட நிலையில் உள்ள தண்டவாளத்தின் வழியாகவே நடந்து செல்கின்றனர்.
எனவே ரயில்வே ஸ்டேஷனின் இரண்டு பிளாட்பாரங்களையும் அத்திக்குளம் ரோடு வரை நீட்டிக்க, ரயில்வே நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

