/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு
/
சாத்துார் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு
சாத்துார் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு
சாத்துார் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு
ADDED : நவ 28, 2024 04:48 AM
சாத்துார்: சாத்துார் முக்கு ராந்தல் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சாத்துார் முக்கு ராந்தல் மாரியம்மன் கோயில் 100 ஆண்டுகள் பழமையானது. இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கும் கோட்டூர் குருசாமி கோயிலுக்கும் செல்லும் பக்தர்கள் இக் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு செல்வது வழக்கம்.
சாத்துார் சுற்று கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் இக்கோயிலில் நடைபெறும் பங்குனி பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயில் கற்களால் கட்டப்பட்டது.
இதன் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சுதை மண்ணால் ஆனது. பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாததால் கோயில் கருவறை மேல் உள்ள கோபுரத்தில் உள்ள சுதை சிற்பங்கள் சேதம் அடைந்தும் பொலிவு இழந்தும் வருகின்றன.
இதனால் பக்தர்கள் மனவேதனை அடைந்து வருகின்றனர்.
கோயில் கருவறை மீது உள்ள கோபுரத்தில் உள்ள சிற்பங்களை பழமை மாறாமல் சீரமைக்கவும் கும்பாபிஷேகம் நடத்தவும் அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் விரும்புகின்றனர்.