தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/காரியாபட்டி போக்குவரத்து பணிமனையை நிரந்தரமாக்க எதிர்பார்ப்பு :வாடகை இடத்தால் அடிப்படை வசதிகள் செய்ய முடியல

காரியாபட்டி போக்குவரத்து பணிமனையை நிரந்தரமாக்க எதிர்பார்ப்பு :வாடகை இடத்தால் அடிப்படை வசதிகள் செய்ய முடியல

காரியாபட்டி போக்குவரத்து பணிமனையை நிரந்தரமாக்க எதிர்பார்ப்பு :வாடகை இடத்தால் அடிப்படை வசதிகள் செய்ய முடியல


ADDED : மார் 02, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரியாபட்டி:காரியாபட்டி அரசு போக்குவரத்து பணிமனை பல ஆண்டுகள் ஆகியும் நிரந்தரமாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தனியார் இடத்தில் செயல்பட்டு வருவதால் அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் பணிமனையை நிரந்தரமாக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரியாபட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க., ஆட்சியில் அரசு போக்குவரத்து பணிமனை கொண்டு வரப்பட்டது. தனியார் இடத்தில் ஆரம்பிக்கப் பட்டது. அதற்குப்பின் நிதி ஒதுக்கி நிரந்தரமாக்கப்படும் என எதிர்பார்த்தனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் நடவடிக்கை இல்லை. பல்வேறு கோரிக்கைகளுக்கு பின் அப்போதைய முதல்வர் ஜெ. சட்ட சபையில் 110 விதியின் கீழ் பல்வேறு இடங்களில் தற்காலிக பஸ் பணிமனைகளை நிரந்தரமாக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி மற்ற இடங்களில் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

காரியாபட்டியில் மட்டும் நிரந்தர பணிமனை கட்டாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்கு பின் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. காரியாபட்டியை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கிருந்து பஸ் வசதி செய்யப்பட்டு, சீராக இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் வாடகை இடத்தில் இயங்குவதால் அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

டீசல் நிரப்ப அருப்புக் கோட்டை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பணிமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் சில நேரங்களில் கால தாமதம் ஏற்பட்டு, சரியான நேரத்திற்கு பஸ் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இங்கு ஊழியர்கள் பலர் பணியாற்ற தயங்கி வருகின்றனர்.

இப்பிரச்னைக்கு நிரந்தர மாக தீர்வுகாண வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. காரியாபட்டி அரசு போக்குவரத்து பணிமனையை நிரந்தரமாக்க மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us