/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் பஸ் ஸ்டாண்ட் நகராட்சி கடைகளை சீரமைக்க எதிர்பார்ப்பு
/
சாத்துார் பஸ் ஸ்டாண்ட் நகராட்சி கடைகளை சீரமைக்க எதிர்பார்ப்பு
சாத்துார் பஸ் ஸ்டாண்ட் நகராட்சி கடைகளை சீரமைக்க எதிர்பார்ப்பு
சாத்துார் பஸ் ஸ்டாண்ட் நகராட்சி கடைகளை சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 20, 2025 11:47 PM
சாத்துார்:சாத்துார் அண்ணா பவளவிழா பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சி கடைகளை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சாத்துார் பஸ் ஸ்டாண்டில் 20க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி நகராட்சி வாடகைக்கு விட்டுள்ளது. இந்த கடைகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் கூரைகள் சேதமடைந்து காரை பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. கடைகளின் ஷட்டர்களும் பழுதான நிலையில் உள்ளன.
கடைகளுக்குள் பொருட்களை வைத்து வியாபாரம் செய்ய முடியாத நிலையில் பெயரளவுக்கு கடையை வைத்து விட்டு பிளாட்பாரத்திலேயே பொருட்களை பரப்பி வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்யும் நிலை உள்ளது. பலத்த மழை பெய்யும் போது ஆஸ்பெட்டாஸ் கூரையும் ஒழுகுவதால் வியாபாரிகளின் பொருட்கள் நனைந்து வீணாகும் நிலை உள்ளது.
மேலும் கூரை சேதம் அடைந்த நிலையில் மழைக்காலத்தில் கடையில் தண்ணீர் ஒழுகுவதால் வியாபாரிகள் கடும் அவதிப்படுகின்றனர்.நகராட்சி நிர்வாகம் கடைகளை சீரமைத்து தர வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.