/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மல்லாங்கிணர் பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க எதிர்பார்ப்பு
/
மல்லாங்கிணர் பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க எதிர்பார்ப்பு
மல்லாங்கிணர் பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க எதிர்பார்ப்பு
மல்லாங்கிணர் பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 27, 2025 03:49 AM
காரியாபட்டி: மல்லாங்கிணர் பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் சேத்தூர், வத்திராயிருப்பு, செட்டியார்பட்டி, காரியாபட்டி, மல்லாங்கிணர், மம்சாபுரம், சுந்தரபாண்டியம், கொடிக்குளம், வ.புதுப்பட்டி பேரூராட்சிகள் உள்ளன. பெரும்பாலான பேரூராட்சிகளில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. ஒரு சில பேரூராட்சிகளில் 2, 3 பஸ்கள் நின்று செல்லும் அளவிற்கு இடம் வசதி செய்யப்பட்டு பஸ் ஸ்டாண்ட் போல் செயல்பட்டு வருகிறது. அதிக போக்குவரத்து உள்ள மல்லாங்கிணரில் பஸ் ஸ்டாண்ட் வசதி கிடையாது. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பல்வேறு வெளியூர்களுக்கு செல்ல பயணிகள் மல்லாங்கிணர் வரவேண்டும்.
நீண்ட நேரம் காத்திருந்து பஸ் பிடித்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. பஸ்கள் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்போடு பயணிகள் காத்திருக்கின்றனர். மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்தினால் அனைத்து பஸ்களும், பஸ் ஸ்டாண்டிற்கு வந்து நின்று சென்றால் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பஸ் நேர கால அட்டவணையை பார்த்தோ, டைம் கீப்பரிடம் தகவல் கேட்டோ தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப பயணத்தை மாற்றி அமைக்க பயணிகளுக்கு வாய்ப்பு ஏற்படும்.
பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த அப்பகுதி மக்களின் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், பஜாரில் போக்குவரத்து நெருக்கடி இருப்பதால், சமாளிக்க புறவழிச் சாலை பணிகள் தொடங்க உள்ளது. அப்பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. புறவழிச் சாலையில் ஊரை ஒட்டி பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.