ADDED : ஜூன் 03, 2026 04:33 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையம் ஏ.கே.டி தர்மராஜா டிரஸ்ட், ஹூண்டாய், ஐ.ஐ.டி மெட்ராஸ், கார்கினோஸ் ஹெல்த் கேர் இணைந்து இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் ஏ.கே.டி.ஆர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
முகாமில் வாய்வழி, மார்பக, பெருங்குடல், கருப்பை வாய் புற்றுநோய் தொடர்பான மருத்துவ பரிசோதனை ஆலோசனைகள் தலைசிறந்த மருத்துவ குழுவினரால் வழங்கப்பட்டன.
ஏ.கே.டி கல்வி டிரஸ்ட் தாளாளர் கிருஷ்ணமராஜூ தலைமை வகித்தார்.
