நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் மாவட்ட தலையீட்டு மையம் (டி.இ.ஐ.சி.,), சுகாதாரத்துறை, சென்னை இ.என்.டி., ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்.இ.ஆர்.எப்) இணைந்து சிறுவர்களுக்கான பிறவி காது கேளாமைக்கான இலவச செவிப்புலன் பரிசோதனை, காது-, மூக்கு,- தொண்டை பரிசோதனை முகாம் டீன் ஜெயசிங் தலைமையில் நடந்தது.
இதில் குழந்தைகள் நலப்பிரிவு துறைத் தலைவர் சங்கீத், டி.இ.ஐ.சி., திட்ட அலுவலர் ரோனிஷா, மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, டாக்டர் குனே உள்பட பலர் பங்கேற்றனர். இம்முகாமில் 71 சிறுவர்களில் 7 பேருக்கு கோக்லியர் இம்ப்லாண்ட் அறுவை சிகிச்சை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் செய்யவும், 20 பேருக்கு காது கேட்கும் கருவியும், மாற்றுத்திறனாளி சான்றிதழ் 9 பேருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.