ADDED : செப் 02, 2026 06:39 AM

அ நிறம் | அளவு
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியைச் சேர்ந்த அன்புச்செல்வன், 41, என்பவருக்கு சொந்தமான கடையை, திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்த செந்தில்குமார், 31, வாடகைக்கு எடுத்து, பட்டாசு விற்பனை செய்கிறார்.
நேற்று காலை, 7:00 மணியளவில், மின் கசிவு காரணமாக, கடையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் நாசமாகின. காலையில், கடை திறப்பதற்கு முன்பே விபத்து ஏற்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
