/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
/
சாத்துார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
ADDED : ஜன 29, 2025 01:40 AM
சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே மண்குண்டாம் பட்டியில் நேற்று இரவு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. 4 அறைகள் சேதம் அடைந்தன. தொழிலாளர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சிவகாசியை சேர்ந்தவர் சண்முகையா, 60. இவருக்கு மண் குண்டாம் பட்டியில் ஆர்.எஸ்.ஆர். பேன்சி ரக பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் லைசன்ஸ் பெற்ற இந்த ஆலையில் 40 அறைகள் உள்ளன.
நேற்று மாலை 5:00 மணிக்கு தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றனர். இரவு 7:00 மணி அளவில் மருந்து கலக்கும் அறையில் மீதம் இருந்த மருந்து நீர்த்து திடீரென வெடித்தது. இந்த விபத்தில் ஒரு அறை முற்றிலும் தரைமட்டமானது. 3 அறைகள் பாதி சேதமடைந்தன.
வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். டி.எஸ்.பி.நாகராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

