/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பெண் காயம்
/
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பெண் காயம்
ADDED : ஜன 25, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நதிக்குடியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி  விபத்தில் பெண் தொழிலாளி காயமடைந்தார்.
சிவகாசி பி.கே.என். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் 44. இவருக்கு நதிக்குடியில் நாக்பூர் உரிமம் பெற்ற காரனேஷன் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு நேற்று ஒரு அறையில் ஆத்துாரைச் சேர்ந்த தங்கம்மாள் 50, ராக்கெட் வெடிக்கு மருந்து செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்ததில் தங்கம்மாள் காயமடைந்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

