ADDED : பிப் 20, 2025 01:45 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே போடுரெட்டியபட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுரேஷ் 42, பலியானார். பால்பாண்டி 41, காயமடைந்தார். ஒரு அறை தரைமட்டமானது.
சிவகாசி முருகன் கோவில் பகுதியை சேர்ந்த ரமேஷ் 52, சென்னை உரிமம் பெற்று கிச்ச நாயக்கன்பட்டி அருகே போடுரெட்டியபட்டியில் நீராத்திலிங்கம் பயர் ஒர்க்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள 16 அறைகளில் 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று மாலை 5:00 மணி அளவில் சிட்டு புட்டு வெடிக்கு மருந்து செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருத்தங்கலை சேர்ந்த பால்பாண்டி காயமடைந்தார்.
சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.