/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாய நில உடைமை பதிவுக்கு கால நீட்டிப்பு
/
விவசாய நில உடைமை பதிவுக்கு கால நீட்டிப்பு
ADDED : ஜூன் 21, 2025 11:52 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நில உடைமை பதிவுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, என வேளாண்மை இணை இயக்குனர் விஜயா தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு: வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடைமை விவரங்கள் வேளாண்மை, தோட்டக்கலை, அலுவலர்களால் வலைதளத்தில் கட்டணமின்றி பதிவு செய்யப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை, பயிர் காப்பீடு திட்டங்கள் இந்த பதிவுகளின் அடிப்படையில் இனி செயல்படுத்தப்படவுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 1.03 லட்சம் விவசாயிகளில் 61, 278 பேர் மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதில் மீதமுள்ள விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைத்த அலைபேசி எண் பதிவு செய்து தனி அடையாள எண் பெற வேண்டும்.
பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள் பதிவு செய்யாவிட்டால் அடுத்த தவணை முதல் ஊக்கத்தொகை கிடைக்காது. நில உடைமை பதிவுக்கான கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.