/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் போலீசாருக்கு கண் பரிசோதனை முகாம்
/
ஸ்ரீவி.,யில் போலீசாருக்கு கண் பரிசோதனை முகாம்
ADDED : ஜூன் 21, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் காவல் துறை, கிருஷ்ணன் கோவில் சங்கரா கண்மருத்துவமனை சார்பில் போலீசார்,அவர்களது குடும்பத்தினருக்கான கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
டி.எஸ்.பி.ராஜா தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். டாக்டர் சுதா தலைமையிலான மருத்துவ குழுவினர் கண்பரிசோதனை செய்தனர். பின்னர் போக்குவரத்து போலீசாருக்கு வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டது. கண் மருத்துவமனை சார்பில் பேரிகார்டுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை போலீசார், கண்மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.