ADDED : மார் 04, 2024 04:49 AM

அ நிறம் | அளவு
சிவகாசி: உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சிவகாசி பி.எஸ்.ஆர்., கல்லுாரி திருநெல்வேலி, கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனையில் நவீன கருவிகளுடன் கூடிய இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
அரவிந்த் கண் மருத்துவமனை ஆலோசகர் ராமகிருஷ்ணன், டாக்டர் மீனாட்சி, ஆர்த்தி ஸ்கேன்ஸ் இயக்குனர் அருண்குமார் தலைமை வகித்தனர். டாக்டர் ராமகிருஷ்ணன், மாதவி முகாம் குறித்து பேசினர்.
டாக்டர்கள் ராம் சுதர்சன், ஹரிணி கிருஷ்ணா வரவேற்றனர். முகாமில் 700 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர். ஏற்பாடுகளை பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி நிர்வாகம் செய்தது.
