ADDED : ஏப் 26, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : - ஸ்ரீவில்லிபுத்துாரில் இல்லத்து பிள்ளைமார் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
சங்க தலைவர் அங்குராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் கார்த்திக், துணை செயலாளர் சக்தி மோகன் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் மாதவன் முகாமை துவக்கி வைத்தார்.
அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் ஹர்ஷினி, நிவேதிதா மருத்துவ குழுவினர் 250 க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.
இதில் 30 பேர் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பொருளாளர் திருப்பதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் செய்திருந்தார்.