UPDATED : நவ 28, 2026 12:00 AM
ADDED : நவ 27, 2026 11:16 PM
காரியாபட்டி: நீதிபதி கையெழுத்தை போலியாக போட்டு வேலைக்கான உத்தரவு வழங்கிய விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த ஆதிமூலத்தை 42, கடலூர் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்
கடலூரை சேர்ந்த சில இளைஞர்களிடம் அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் கோர்ட்டில் அலுவலக உதவியாளர் வேலை இருப்பதாக கூறி பணம் பெற்று, பணி நியமன உத்தரவை கொடுத்தார். அவை போலியென தெரிந்தது. அது குறித்து கடலூர் போலீசில் புகார் கொடுத்தனர். இச் சம்பவத்தில் மிகப் பெரிய நெட் வொர்க் இருப்பது தெரிந்தது.
வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரித்ததில் நீதிபதி கையெழுத்தை காரியாபட்டியை சேர்ந்த ஆதிமூலம் போலியாக போட்டு அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி, பணி நியமன உத்தரவை வழங்கியது தெரிந்தது. நேற்று இரவு சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், எஸ்.ஐ., கண்ணன் குழுவினர் காரியாபட்டியில் வீட்டில் இருந்த ஆதிமூலத்தை கைது செய்தனர்.
