/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விளை நிலங்களில் சாய்ந்த மின் கம்பங்கள்: விவசாயிகள் அச்சம் விவசாயிகள் அச்சம்

ADDED : ஆக 31, 2025 12:26 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன் குறிச்சி, செவல்பட்டி, அம்மையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் சாய்ந்த, சேதம் அடைந்த மின் கம்பங்களால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன் குறிச்சி, செவல்பட்டி, அம்மையார்பட்டி சோளம், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது. இந்த விவசாய நிலங்களில் வழியாக மின்சாரம் வினியோகம் செய்வதற்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மின்சாரம் செல்கின்றது. விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் ஒரு சில மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது.
பெரிய மழை பெய்யும் போது சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்துடனே விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது உழவுப் பணிகள் நடந்து வருகிறது. விவசாய பணிகள் நடைபெறும் போது மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும், சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.