
டூ வீலரிலிருந்து தவறி விழுந்து பெண் பலி
சேத்துார்: டூவீலர் விபத்தில் கணவர் கண்முன்னே தடுமாறி விழுந்த மனைவி சம்பவ இடத்தில் பலியானார். தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன். மனைவி சேர்மக்கனியையும் 40, தனது ஒரு வயது குழந்தை ஹன்சிகா ஸ்ரீயையும் அழைத்துக் கொண்டு ராஜபாளையம் தனியார் மருத்துவமனைக்கு டூவீலரில் வந்தனர். நேற்று மதியம் 3:30 மணிக்கு சேத்துாரை கடந்தது வந்த போது முன்னால் சென்ற டூவீலர் திடீரென திரும்பியது. மாரியப்பன் தடுமாறியதில் குழந்தையை கையில் வைத்திருந்த சேர்மக்கனி பின்னால் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்தில் பலியானார். 16 வருடங்களுக்கு பின் பிறந்த குழந்தையை தவிக்க விட்டு தாய் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுபாட்டில் பறிமுதல்: இருவர் கைது
சாத்துார்: ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த வைரமுத்து, 37. சாத்துார் மேலக் காந்தி நகரை சேர்ந்த கணேசன் 33 ஆகியோர் 750 மி.லி அளவு கொண்ட 13 வெளிமாநில மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தனர். போலீசார் மது பாட்டிலை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.