ADDED : மார் 30, 2025 03:28 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., துவக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு முடித்து, 6ம் வகுப்பு செல்லும் மாணவ மாணவியர்களுக்கு பிரிவு பிரிவுபசார விழா நடந்தது.
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்து, மாணவர்களுக்கு மரக்கன்றுகள் இனிப்புகள் வழங்கி அனுப்பி வைத்தார். பள்ளிச் செயலாளர் சௌந்தரபாண்டியன், பள்ளி தலைவர் முருகன், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை ரெங்காதேவி நன்றி கூறினார்.
