ADDED : மே 11, 2026 11:10 PM

அ நிறம் | அளவு
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோவிலுாரைச் சேர்ந்த விவசாயி தவசிமுத்து 53. மனைவி கனக ஜோதி, இரண்டு மகன்கள் உள்ளனர். இவருக்கு தேவதானம் பெரிய கோயில் பின்புறம் சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. நேற்று அதிகாலை தென்னைக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு தவசிமுத்து சென்றார்.
நேற்று முன்தினம் இரவு வீசிய பலத்த காற்றினால் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் அவர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் இறந்தார். சேத்துார் போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகளும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
