/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதியில் தடுப்பணை பணிகள் விவசாயிகள் தவிப்பு
/
பாதியில் தடுப்பணை பணிகள் விவசாயிகள் தவிப்பு
ADDED : ஏப் 18, 2025 05:18 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டம்புதுார் குப்பாம்பட்டிக்கு குல்லுார் சந்தையில் இருந்து வரும் உபரிநீர் தடுப்பணை மூலம் சேகரிக்கப்படுகிறது. இந்த தடுப்பணை பணிகள் பாதியில் கிடப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
விருதுநகர் நகராட்சியின் ஒட்டுமொத்த கழிவுநீரும் அப்படியே கவுசிகா நதியில் விடப்படுகிறது. அந்த கழிவுநீர் குல்லுார்சந்தை அணைக்கு வந்து இந்த தடுப்பணைக்கு வருகிறது. ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், தடுப்பணையின் உள் பகுதியிலும், வெளிப் பகுதியிலும் மண் திட்டுகள் அகற்றவும், குல்லுார்சந்தையின் அணையின் உள்புறம் இன்னும் ஆழப்படுத்தி அணையில் தண்ணீர் கொள்ளளவை அதிகரிக்கவும், குப்பாம்பட்டி தடுப்பணையின் இரண்டு பக்கமும் விவசாயம் இருப்பதால் கிராம மக்கள் விவசாய வேலைகளுக்கு சென்று வரும் வகையில் அணையின் முன்பக்கம் ஒரு தத்துப் பாலமும் அமைக்க வேண்டும்.
காவிரி குண்டாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுணன் தலைமையிலான அமைப்பினர் தடுப்பணையை பார்வையிட்டனர். விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.