/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்காததற்கு விவசாயிகள் கண்டனம்
/
நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்காததற்கு விவசாயிகள் கண்டனம்
நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்காததற்கு விவசாயிகள் கண்டனம்
நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்காததற்கு விவசாயிகள் கண்டனம்
ADDED : மே 01, 2025 05:54 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் காவிரி வைகை கிருது மால் குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு 5 பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்காமல் புறக்கணித்த தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் எழுச்சி மாநாடு நடந்தது.
மாவட்ட தலைவர் ராம் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் மச்சேஸ்வரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மலைச்சாமி, சிவகங்கை மாவட்ட செயலாளர் அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காவிரியில் பருவ மழை காலத்தில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு வரும் திட்டம் தான் இணைப்பு கால்வாய் திட்டம். கரூர் மாவட்டத்திலிருந்து காரியாபட்டி புதுப்பட்டி வரை 262 கி.மீ., தூரத்திற்கு கால்வாய் வெட்ட விரைந்து நிதி ஒதுக்க வேண்டும்.
7 மாவட்டத்தில் உள்ள 4 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் இத்திட்டம், 60 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதை கண்டித்தும், 25 ஆண்டுகளாக தொடர்ச்சியாக போராடி வருவதற்கு தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தியும், அ.தி.மு.க., ஆட்சியில் ரூ. 800 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்த டெண்டர்கள் விடப்பட்டு சில கி.மீ. தூரம் மட்டும் கால்வாய் வெட்டப்பட்ட பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்தும், நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வஞ்சித்து வருவதை கண்டித்தும், ஆயிரம்பேர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய பின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்தும். தமிழக முதல்வரை பலமுறை சந்தித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட இணைச் செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.