/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கரும்பு விளைச்சல் இருக்கு, விலையும் இருக்கு அரசாங்கம் கொள்முதல் செய்தால் போதும் விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
கரும்பு விளைச்சல் இருக்கு, விலையும் இருக்கு அரசாங்கம் கொள்முதல் செய்தால் போதும் விவசாயிகள் எதிர்பார்ப்பு
கரும்பு விளைச்சல் இருக்கு, விலையும் இருக்கு அரசாங்கம் கொள்முதல் செய்தால் போதும் விவசாயிகள் எதிர்பார்ப்பு
கரும்பு விளைச்சல் இருக்கு, விலையும் இருக்கு அரசாங்கம் கொள்முதல் செய்தால் போதும் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 02, 2024 04:55 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் எரிச்சநத்தம், நடையனேரி, முருகனேரி உள்ளிட்ட பகுதிகளில் குறைவான பரப்பில் மட்டுமே கரும்புகள் நடவு செய்யப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருக்கும் கரும்புகளை தமிழக அரசு நேரடி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தின் எரிச்சநத்தம், நடையனேரி, முருகனேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் பொங்கலுக்காக கரும்புகள் நடவு செய்யப்படுவது வழக்கம். விவசாயிகள் வழக்கமாக 200 ஏக்கர் வரை கரும்பு பயிரிட்டு அறுவடை செய்தனர். விருதுநகர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யாமல் முந்தைய ஆண்டு மற்ற மாவட்டங்களில் கொள்முதல் செய்த கரும்பை நியாயவிலைக்கடைகள் மூலம் மக்களுக்கு அரசாங்கம் வழங்கியது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது கரும்பின் விளைச்சல் மக்களுக்கு வழங்கும் அளவிற்கு இல்லை என கூறினார்.
மேலும் தமிழக அரசு பொங்கல் கரும்பை கொள்முதல் செய்வதில் கடந்த சில ஆண்டுகளாக தயக்கம் காட்டுவதால் பல விவசாயிகள் கரும்பு நடவு செய்வதை கைவிட்டு விட்டு மானாவாரி பயிர்களை நடவு செய்யத்துவங்கினர். இதனால் முந்தைய ஆண்டு 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு, நடப்பாண்டில் 100 ஏக்கராக குறைந்து விட்டது. ஆனால் சென்ற வருடத்தை காட்டிலும் முன்பே நடவு செய்ததால் விளைச்சல் அதிகமாக கிடைத்து அறுவடைக்கு தயார் நிலையில் பொங்கல் கரும்புகள் உள்ளது. விளைச்சல் அதிகரித்தது போல வேலையாட்களின் கூலியும் அதிரித்துள்ளது. 20 கட்டு கரும்பு வெட்டி, லோடு ஏற்ற ஒரு நபருக்கு ரூ. 700 கூலியாக செலவாகிறது. சென்ற ஆண்டு ரூ. 250 க்கு ஒரு கட்டு கரும்பு விலை போனது . இந்தாண்டு விலை உயர்ந்து ரூ. 300 முதல் ரூ.320 என விலை போகிறது.
பொங்கல் பண்டிகைக்கு நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்க காலம் தாழ்த்தி அறிவிப்பு வெளியீட்டு, அதன் பின் மாவட்டத்தின் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதை தவிர்த்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.
விவசாயி முனியப்பன் கூறியதாவது:
கரும்பு விவசாயம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில் சென்ற முறை அதிகாரிகள் போதிய விளைச்சல் இல்லை என கூறியதால் இந்த முறை முன்கூட்டியே நடவு பணிகள் துவங்கப்பட்டு நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. எனவே அரசாங்கம் உடனடியாக கொள்முதல் செய்ய் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

