/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரண்டாவது முறையாக 41 அடியை தொட்ட பிளவக்கல் பெரியாறு அணை தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

ADDED : நவ 14, 2025 03:53 AM

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2வது முறையாக 41 அடியை எட்டியுள்ளது. இதனால் பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த மாதம் பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் 41 அடியை கடந்த நிலையில் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாய் நிரம்பியது. ஆனால் விராகசமுத்திரம், சுற்றுவட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்படவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பெரியாறு அணையில் நீர்மட்டம் 41. 60 அடியாக உயர்ந்தது. நேற்றும் பெரியாறு அணையில் 34.6 மி.மீ., கோவிலாறு அணையில் 15.8 மி.மீ., மழை பதிவானது. அணைகளுக்கு மிகவும் குறைந்த அளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டது.
இந்நிலையில் பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும் என வத்திராயிருப்பு தாலுகா விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதனையடுத்து ஓரிரு நாட்களில் அணை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.